தமிழர்களுக்கு சுயாட்சி, போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை! – ட்ரம்பிடம் புலம்பெயர் தமிழர் அமைப்பு கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறும், போர்க்குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம், ட்ரம்புக்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டிற்குள் இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க ஆவன செய்யுமாறு, அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்பிடம், புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர். அவசர மகஜர் ஒன்றின் ஊடாக இந்தக் கோரிக்கை ட்ரம்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இராணுவத்தினரால் 145000 தமிழர்கள் கூட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இலங்கை இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்குமாறும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.

Tags: , ,