தமிழக முதல்வராக சசிகலா வர விரும்புவதற்கு இது தான் காரணம்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை, அவரின் நெருங்கிய தோழியான சசிகலா தற்போது ஏற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என்றும் அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சசிகலாவோ இது குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் சசிகலா முதல்வர் ஆவதற்கு ஆசைப்படுகிறார், இதனால் தான் அவர் இது குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் சசிகலா ஏன் முதல்வர் ஆவதற்கு இவ்வளவு வேலைகள் நடக்கின்றது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை நடந்த ஆட்சியில் ஜெயலலிதா சசிகலா உட்பட 4 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 வருடம் சிறை தண்டனையும் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேல் முறையீட்டு வழக்கில் இந்த 4 பேரும் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்தும் நிறைவு பெற்றுள்ள நிலையில், தீர்ப்பு மட்டுமே இன்னும் உள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டார். தற்போதைய தீர்ப்பில் இருந்து சசிகலா மற்றும் அவருடன் வழக்கில் சேர்க்கப்பட்ட மற்றவர்களுக்கு தண்டனை உறுதி என்று சட்ட வல்லூனர்கள் கூறி வருகின்றனர். மேலும் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும் 10 ஆம் திகதிக்குள் வந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி 10 ஆம் திகதிக்குள் தீர்ப்பு வந்து விட்டால் சசிகலாவின் முதல்வர் கனவு பரிதாபம்தான். தீர்ப்பு வருவதற்குள் முதல்வர் ஆக வேண்டும் என்பதால் தான் இது போன்ற வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Tags: