நடுத்தர வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை: சுதர்ஷனி பெர்ணான்டோ!

நாட்டில் நடுத்தர வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 30 தொடக்கம் 60 வயதானவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நான்காயிரம் மத்திய நிலையங்களிள் அமைக்கப்படவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நாளாந்தம் 2 ஆயிரம் மத்திய நிலையங்களில் 300 பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் நாளொன்றில் 6லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!