ஏனைய மாகாணங்களில் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமையினால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.\

இதற்கமைய, மேல் மாகாணத்தில் பணிபுரிபவர்கள் தொடர்ந்தும் வெளி மாகாணங்களுக்கு பயணித்து வருவதன் காரணமாக 25 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும், பி.சி.ஆர். பரிசோதனை முடிகள் தாமதமடைவதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!