கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி நாளை பிற்பகல் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவ தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவங்ச 10 அரசியல்கட்சி தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே பிரதமர் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!