மொட்டு- விமல் முறுகல் முற்றுகிறது!

வெளிநாட்டுப் புலனாய்வு சேவையுடன் தொடர்புடையவர்கள், தனக்குப் பின்னால் இருந்தால், அது தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கமாறு, அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

அவ்வாறு யாரேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பொலிஸ்மா அதிபரூடாக வாக்குமூலம் பெறப்பட்டு, விசாரணை நடத்தப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாமல், ஜனாதிபதி செயலகத்தில் மாத்திரம் ஜனாதிபதி இருப்பது, கட்சிக்கும் ஆட்சிக்கும் சரியில்லை என்ற ஒரு காரணத்துக்காகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்ப் பதவியை, ஜனாதிபதி ஏற்கவேண்டும் என்று தான் கூறியதாகவும் இதன்மூலம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அகற்றப்பட வேண்டும் என்ற அர்த்தம் உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியை, ஆட்சிக்கு கொண்டுவரவும் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்யவும் முன்னின்று செயற்பட்டது தவறு என்றால், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!