பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்கிறாரா அஞ்சலி?

நடிகை அஞ்சலி கடந்த 3 வருடங்களுக்கு முன் தனது சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்து சென்றவர் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். ஒரு வருடம் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமலிருந்தவர் பின்னர் தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் சித்தியுடனான பிரச்னைக்கும் பேசி தீர்வு கண்டதாக தெரிகிறது. தற்போது அஞ்சலிக்கு தெலுங்கில் கைவசம் படங்கள் எதுவும் இல்லை ஆனால் தமிழில் தரமணி, காண்பது பொய், பேரன்பு, பலூன் உள்பட 5க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார்.

ஏற்கனவே அவர் விஷாலுடன் நடித்து முடித்திருக்கும் மத கஜ ராஜா முடிவடைந்து திரைக்கு வராமல் தள்ளிப்போயுள்ளது. தெலுங்கு படங்களில் நடிக்காமல் மவுனம் காத்து வரும் அஞ்சலி திருமணம் செய்யவுள்ளதாக டோலிவுட்டில் கிசுகிசு பரவி வருகிறது. எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஜெய்யுடன் அஞ்சலி இணைந்து நடித்தார். ஜெய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திலும் கெஸ்ட் ரோலில் அஞ்சலி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது. ஆனால் ஜெய், அஞ்சலி காதலிப்பதாக ஏற்கனவே பலமுறை கிசுகிசு வெளிவந்திருந்தது. அதை அப்போது ஜெய் மறுத்து வந்திருக்கிறார். சமீபகாலமாக ஜெய் புதுபாலிசி ஒன்றை கடைப்பிடிக்கிறார். தனது பட புரமோஷன்களில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். நயன்தாரா, அஜீத் போன்றவர்களும் தங்கள் பட புரமோஷன்களில் பங்கேற்பதை தவிர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,