இந்தியாவுடன் அக்கா தம்பி உறவுமுறையை தொடர வேண்டும் -டிலான் பெரேரா

வடக்கில் மின் உற்பத்தி முதலீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படும் தீவுகளில் ஒன்று இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

“வடக்கில் மூன்று தீவுகளில் சீனாவின் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் தீவுகளில் ஒன்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்பதை எனது தனிப்பட்ட விருப்பமாகும். இந்தியாவுடன் நாம் அக்கா தம்பி உறவுமுறையொன்றை தொடர வேண்டும். தற்போது உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கமைய இந்த நடவடிக்கை சிறந்தது என எண்ணுகின்றேன். அத்துடன் வடக்கின் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்காக அது சீனாவிற்கு விற்பனை செய்யப்படவில்லை. முதலீட்டுக்காகவே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே முதலீடுகளை வழங்கும் போது மூன்றையும் சீனாவுக்கு வழங்காமல் ஒன்றை இந்தியாவுக்கு வழங்குவது சிறந்தது என எண்ணுகின்றேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும் விலை மனுக்கோரலின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.”

என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!