எனக்கு சினிமாவில் வழிகாட்டியவர் ஜி.வி பிரகாஷ்: – பாடகர் அருண்ராஜா காமராஜ்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக சாதனை படைத்து இப்போது நடிகராக கலக்கி வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்துவரும் இவரின் நடிப்பில் வரும் பொங்கலுக்காக புரூஸ் லீ படம் வெளியாகிறது.இதன் பிரஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஜி.வி படம் எல்லோருக்கும் பிடிக்கும், டார்க் ஹுயூமர் இந்த படத்தில் உள்ளது.இதில் சில சண்டை காட்சிகள் வரும். படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள். என்னை Fighting ஸ்டார் என்கிறார்கள். அதெல்லாம் எனக்கு வேண்டாம்.

இந்த படத்தில் FUN ஆன பாடல் உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் எடுத்துள்ளார். அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.தொடர்ந்து காமெடி படங்களில் நான் நடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். இனிவரும் படங்களில் ஆக்க்ஷன் இருக்கும் என கூறினார்.மேலும் பாடகர் அருண்ராஜா காமராஜ் பேசியபோது ஜி,வி பிரகாஷ் எனக்கு கலையுலகத்தின் அம்மா என சொன்னார்.அவர் தான் எனக்கு சினிமாவில் வழிகாட்டியவர். இந்த படம் ஒரு கமர்சியல் மட்டும்மில்லாமல் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என பேசினார்.

Tags: ,