தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்பது எனது 10 வருட கனவு: – சசிகலா ஒபன் டாக்

அதிமுக சார்பில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்பது தமது நீண்ட 10 வருட கனவு என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அந்த கட்சி நிர்வாகிகளால் தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சசிகலா மீது கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த எதிர்ப்பை சமாளிக்கும் நோக்கில் சமீபத்தில் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் ஒன்றை நடத்த சசிகலா முடிவு செய்து தொடர்ந்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் போயஸ் கார்டனில் ஒன்று கூடிய சசிகலா உறவினர்கள் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்துள்ளனர். அப்போது, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது அதிருப்தியையும் சந்தேகத்தையும் சசிகலா வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொதுச்செயலாளர் பதவிக்கும் பன்னீர் செல்வம் ஆசைப்பட்டார். அவர் காட்டுறது பணிவல்ல, நடிப்பு. மத்திய அரசோடு நாம இணக்கமா நடந்துக்கிறதுன்னு வாக்குறுதி தந்திருக்கோம். ஆனாலும் அவங்க, பன்னீரை முழு கண்ட்ரோலில் வச்சு நமக்கு குடைச்சல் கொடுப்பாங்க.எனக்கு எதிரா எதிர்ப்புகளும் விமர்சனங்களும் அதிகரிச்சுகிட்டு வருது. இதைக் கட்டுப்படுத்த உங்களால முடியல’ என சசிகலா கூறியிருக்கிறார்.அவர் அதிருப்தியா இப்படிச் சொல்லவும், கூட இருந்த உறவினர்களும் நடராஜனும் பன்னீரை நாங்க கவனிச்சுகிட்டுதான் இருக்கோம்னு சொல்ல,முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதில் சசிகலா உறுதியாக இருப்பதாக அப்போது தெரிவித்துள்ளார்.மட்டுமின்றி, இது என்னோட பத்து வருடக் கனவு எனவும் சசிகலா உறுதிபட தெரிவித்ததும் உறவினர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: