கண்டதும் காதல் ஏற்படுவது உண்மையானதா? ஆய்வு கூறும் அருமையான விளக்கம்!

காதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் வித்தியாசமான பல பதில்களை கூறுவார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் இரு மனங்களும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டு பிறகு ஏற்படும் ஒரு வகையான புனித உணர்வுத் தான் நாம் காதல் என்கிறோம்.

காதலில் பல வகைகள் உண்டு. அது தான் பார்த்ததும் காதல், பழகிய பின் காதல், நட்பின் அடிப்படையில் காதல், திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்கு பின் காதல் போன்ற வை ஆகும்.

தற்போது, மற்ற காதல் வகைகளைக் காட்டிலும் கண்டதும் காதல் தான் அதிகமாக நடக்கிறது. மேலும் இந்தக் காதல் சற்று வித்தியாசமானதாகும்.

கண்டதும் காதல் ஏற்படுவது சரியா? தவறா?

ஒரு ஆண், ஒரு அழகிய பெண்ணை பார்க்கும் போது மனதுக்குள் காதல் கொள்கிறான்.

அவளை கண்டவுடன், இவனது மனதிற்குள் பல பட்டாம் பூச்சிகள் பறக்கும், ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

இந்த விஷயத்தில் ஆண் மட்டுமல்ல, பெண்ணுக்கும் கண்டதும் காதல் வந்தால் இவ்வாறு தான் உணர்வுகள் ஏற்படும்.

ஒருவருக்கு கண்டதும் காதல் வருவதற்கு முக்கிய காரணம், அவனது மனதில் தனது எதிர்கால மனைவி எப்படி இருக்கு வேண்டும் என்பது குறித்த சில கற்பனை எண்ணங்கள் இருக்கும்.

அந்த வகையில், தனது கற்பனைக்கு ஏற்ற ஒரு பெண்ணை முதன் முதலில் நேரில் பார்க்கும் போது, கண்டதும் காதல் உணர்வுகள் ஏற்படுகின்றது.

சிலர் மயக்கும் அழகுடன் செல்லும் பெண்கள் அல்லது ஆண்களைக் கண்டவுடன் சட்டென காதலில் விழுந்து விடுவார்கள். இது அவர்களின் அழகில் விழுந்து, அழகை பார்த்து மட்டும் ஏற்படும் காதலாகும்.

ஆனால் ஆராய்ச்சியின் மூலம் கண்டதும் ஏற்படும் காதலுக்கு, அவர்களின் பெயர், ஊர், குணம் என்று எதுவும் தெரியாது, வெறும் தோற்றம் மட்டுமே மனதில் தெரியும்.

இந்த உணர்வுகளை தான் ஆராய்ச்சியாளர்கள் அது காதல் இல்லை காமம் என்று கூறுகின்றார்கள்.

இதுகுறித்து லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் என்பவர் கண்டதும் காதல் ஏற்படுவதைக் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில், முதல் முறையாக ஒரு ஆணும், பெண்ணும் பார்த்துக் கொள்ளும் போது அவர்களுக்குள் காதல் வந்தால் அது காமம் எனும் உணர்ச்சியால் தான் வருகிறது என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: