பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறதாம் வடக்கு தமிழ் பத்திரிகை!

வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பத்திரிகை ஒன்று பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால், சிவில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியில் புலனாய்வுத் துறை பலவீனமாக்கப்பட்டதாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நாட்டில் இடம்பெற்றதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தேசியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!