மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

மார்ச் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாளை 17 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு கற்பதற்காக விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!