மு.க. ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் வைத்த செக்!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் வழங்கியுள்ளது. பருவமழையின் போது கொளத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மு.க ஸ்டாலின், செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக முதல்வர் மற்றும் அவரின் தலைமையிலான தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இதனையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் சார்பாக சென்னை உய்ரநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரணை செய்யும் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!