சுவிஸில் பனிச்சரிவில் சிக்கி 1,884 பேர் பலி: – அதிர்ச்சி தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்த நாள் முதல் தற்போது வரை சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சுவிஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்படுவது என்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்கும் பிடித்தமான பொழுதுபோக்காகும்.ஆனால், ஆபத்து நிறைந்த இவ்விளையாட்டில் ஏற்படும் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பனிச்சரிவு விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கடந்த 1936-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தற்போது வரை பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 2017 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதல் பனிச்சரிவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.உரி மாகாணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவர் பனிச்சரிவில் சிக்கி சுமார் 400 மீற்றர் ஆழத்தில் சிக்கியுள்ளார்.நண்பர்கள் அவரை தோண்டி மீட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து வாலைஸ் மாகாணத்தில் நண்பர்கள் ஐவர் கடந்த சனிக்கிழமை அன்று பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.அப்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு விபத்தில் 3 பேர் சிக்கியுள்ளனர். உடனடியாக மூவரும் ஹெலிகொப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால், துரதிஷ்டவசமாக மூன்றாவது நபர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பனிச்சறுக்கு விளையாட்டின்போது உயிரிழந்த இருவரின் மரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ,