தொடர்ந்து பாலியல் பலாத்காரம்…சிதைந்து போன முகம்: – வலிகளை தாங்கிய அந்த நாட்கள்

ஐஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தனது வாழ்க்கையின் இறுதிகட்டம் வரை சென்று திரும்பி வந்தாலும், நான் சந்தித்த கொடுமைகளே எனது வாழ்வில் நான் வெற்றிநடை போட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்துள்ளது என இளம்பெண் கூறியுள்ளது நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனி ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகள், குறிப்பாக பெண்களை ஒரு உயிரினமாக கூட மதிக்காமல் அவர்களை கொடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.இவர்களிடம் தப்பித்து வரும் சில பெண்கள், தாங்கள் சந்தித்த கொடுமைகள் குறித்து கூறுகையில் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.ஐஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த லாமியா(20) என்ற இளம்பெண் தான் சந்தித்த கொடுமைகள் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் விவரித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டேன். நான் கடத்தப்பட்டபோது தீவிரவாதிகள் எனது பெற்றோரை சுட்டுக்கொலை செய்தனர். தீவிராதிகளின் பிடியில் இருந்து 2 முறை தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்களிடம் சிக்கிக்கொண்டதால் என்னை கொடுமையாக அடித்ததோடு மட்டுமல்லாமல் பலாத்காரம் செய்தனர். அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மொசூல் நகர சந்தையில், தீவிரவாதி ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டேன். அவர் என்னை இரண்டு மாதம் வைத்திருந்து பலாத்காரம் செய்தார், அதன் பின்னர் மற்றொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டேன். அந்த தீவிரவாதி என்னை தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டார். இதனால் அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவரோ ஐஎஸ் மருத்துவர் ஒருவரிடம் என்னை விற்பனை செய்தார்.

அந்த மருத்துவர் என்னை பலமுறை பலாத்காரம் செய்தார். நான் தப்பிக்க முயற்சி செய்யும்போதெல்லாம், இவர்களி என்னை கொடுமையாக தாக்குவார்கள். இதனால் எனது இடது கண்பார்வை பறிபோனதோடு மட்டுமல்லால் முகமே சிதைந்து போனது. நான் சந்தித்த கொடுமைகளால் எனது உடலில் வலி ஏற்பட்டாலும், எனது மனதில் வலிமை அதிகரித்து, நான் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கமே என்னுள் மேலோங்கியது. இறுதியில் கடந்த மார்ச் மாதம் எனது உறவினர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பித்து ஜேர்மனிக்கு வந்தேன். தீவிரவாதிகளின் பிடியில் நான் சிக்கியிருந்தபோது, அனுபவித்த கொடுமைகளே இந்த உலகில் நான் தொடர்ந்து வாழ வேண்டும் என் எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது என கூறியுள்ளார். லாமியா மற்றும் இவருடன் சேர்நது தப்பித்த நாடிய ஆகிய இருவருக்கும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் Freedom Of Thought என்ற அடிப்படையில் வழங்கப்படும் Sakharov பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

Tags: ,