தமிழகத்தில் மின்பொருள் உற்பத்தி ஆலையை தொடங்கவிருக்கும் அமேசான்!

சர்வதேச ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், தனது எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் சென்னையில் தொடங்க இருக்கும் இந்த உற்பத்தி ஆலை, இந்தியாவில் அந்நிறுவனம் தொடங்க உள்ள முதல் உற்பத்தி ஆலையாகும்.

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் அமேசான் நிறுவனம் சென்னையில் தயாரிக்கும் பொருட்கள் சந்தைக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘சென்னையில், இந்தியாவின் தனது முதல் உற்பத்தி ஆலையை அமேசான் நிறுவனம் தொடங்க இருக்கிறது.

இந்த தகவலை அமேசான் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமித் அகர்வால் மூலம் தெரியவந்துள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும், அமேசான் நிறுவனம் சென்னையில் அமைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் முக்கிய அடையாளமாக இருக்கும் என்றும் ரவிசங்கர் பிரசாத் பெருமிதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!