கொலைகாரனை காட்டிக்கொடுத்த ஆவி..! நம்பினால் நம்புங்கள்

இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன்னை கொலை செய்த தனது கணவனை ஆவியாக வந்து காட்டிக்கொடுத்துள்ள திகில் கதை நடந்துள்ளது.

ஆனால், இது இப்போது கிடையாது 1690 ஆம் ஆண்டு நடந்த சம்பவம். பேய் என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி இந்த சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக அனைவரின் காதுகளிலும் ஒழித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு சிலர் பேய் இருக்கிறது என்று சொன்னாலும், பலர் பேய் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் ஒரு விடயத்தை திரும்ப திரும்ப சொல்லிவிட்டால் அதனை நம்பும் அளவுக்கு இந்த சமுதாயம் தள்ளப்படுகிறது.
ஆக மொத்தத்தில் பேய் இருக்கிறது என்ற கருத்துதான் அதிகமாக மேலோங்கி வருவதால், அதனை நம்பும் மனிதர்கள் தான் இந்த சமூகத்தில் அதிகம் என்பதை நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி நம்மை நம்ப வைக்கும் விதமாக நடந்துள்ள சம்பவம் தான் இது,
இங்கிலாந்தில் வசித்து வந்த வில்லியம்- மேரி ஆகிய இருவரும் ஒருவரையாருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அதிகமாக தனிமையில் சந்தித்துக்கொண்டதால் திருமணத்திற்கு முன்னரே மேரி கர்ப்பம் தரித்தாள். இதன் காரணமாக வேறு வழியின்றி மேரியை கட்டாய திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு வில்லியம் ஆளானான்.
இந்த திருமணம் வில்லியம்மிற்கு பிடிக்காத காரணத்தால், எப்படியாவது அவளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளான்.

இந்நிலையில், திருமணம் முடிந்த பின்னர் இவர்கள் இருவரும் யார்க் நகர்ப்புறத்தில் பேசிக்கொண்டு நடந்துசென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த குளத்தில் மேரியை தள்ளிவிட்டுள்ளான். குளத்தில் விழுந்த மேரி உயிருக்கு போராடிய நிலையில், தன்னை காப்பாற்றுமாறு தனது கையை நீட்டி வில்லியமிடம் உதவி கோரியுள்ளாள்.
ஆனால், வில்லியமோ, தனது காலை மேரியின் தலையில் வைத்து அவளை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்துள்ளான். அதன்பின்னர் வீடு திரும்பிய வில்லியம்முக்கு தூக்கம் வரவில்லை.
எங்கே நாம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சம் கொண்ட அவன், மேரியின் உடலை எடுத்துக்கொண்டு வந்து தனது வீட்டிற்கு பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளான்.

இந்நிலையில், தனது அக்கா மேரியை பார்ப்பதற்காக வந்த ஜென்சியிடம், பிரசவத்திற்கு அவளை எனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளேன். அவள் அங்கு பத்திரமாக இருக்கிறாள் என கூறியுள்ளார்.
இதனை ஜென்சியும் நம்பியுள்ளார். இந்நிலையில், ஜென்சியின் கணவர் தாமஸ் தனது தோட்டத்திலுள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார்.

அருகிலிருந்த குளத்திற்கு நீரெடுக்கச் சென்றபோது, குளத்திற்கு சற்று அருகிலிருந்த புல்தரையில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்ததைக் கண்டான். மேரியின் முகச்சாயல் கொண்ட அவளது கையில் வெள்ளைநிறத்தில் ஹேண்ட்பேக் ஒன்று இருந்தது.

மேரியாக இருக்குமோ என சந்தேகமாக பார்த்த அவர், பின்னர் தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்க்கையில் அந்த குளத்தில் அப்பெண்ணை காணவில்லை.
நடந்த சம்பவத்தை தனது மனைவி ஜென்சியிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஜென்சி, தனது அக்காவுக்கு என்னமோ நடந்துவிட்டது என பதறிக்கொண்டு வில்லியம்மின் பெற்றோர் வீட்டுக்கு சென்று, தனது அக்கா குறித்து விசாரித்துள்ளார்.

ஆனால் அவர்களோ, உங்களது அக்கா இங்கு வரவே இல்லை என்று கூறியுள்ளார்கள். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜென்சி, தனது கணவருடன் மேயரிடம் சென்றுள்ளார்.
தாமஸ், இதைப்பற்றி வாய்மொழிப் புகாராக யார்க் நகர மேயர் பிரபுவிடம் கூற, மேயர் அன்றே நடவடிக்கை எடுத்து வில்லியத்தை தீர விசாரித்து மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்தனர்.

மனைவியைக் குளத்தில் தள்ளிக் கொன்ற குற்றத்திற்காக வில்லியமிற்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
என் தோட்டத்தில் நான் மேரியின் உருவத்தைப் பார்க்கவில்லை எனறால், இந்தக் கொலை விடயம் எனக்குத் தெரியாமல் போயிருக்கும். மேரியின் ஆவி, தான் புதைக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியே உண்மையை உலகத்துக்குள் எடுத்துரைத்துள்ளாள் என கூறியுள்ளார்.

Tags: