மஹிந்தவைச் சந்திக்கிறார் சம்பந்தன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசியிருந்தார். அதற்கமைய மஹிந்த ராஜபக்சவுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் விரைவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரம் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படும் என நம்பப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!