ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாகியுள்ளார் – பந்துல குணவர்தன-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேசன ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாகியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவி வகித்தாலும், நாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நிர்வாகம் செய்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஒருவருக்கு ஓருவர் முரண்பட்ட கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குளியாபிட்டியில் வொக்ஸ்வோகன் கார் உற்பத்தி நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கல் நாட்டியதாகவும் பின்னர் அது வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் தொழிற்சாலை அல்ல என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் மக்களை இவ்வாறு பிழையாக வழிநடத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறியின் ஊடாக 23 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி இதுவரையில் உத்தரவிடவில்லை என அவர் குற்சம் சுமத்தியுள்ளார்.

குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் நண்பர்கள் என்பதனால் விசாரணை நடத்தப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,