எனது கைதின் பின்னணியில் பிரதமர் – விமல் வீரவன்ச

????????????????????????????????????

தமது கைதின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஜே.என்.பி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 40 அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகவும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி விமல் வீரவன்சவை நேற்றைய தினம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தம்மையும் மேலும் சிலரையும் கைது செய்ய விரும்புவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் சுவிட்சர்லாந்திற்கான பயணத்தை மேற்கொள்ள முன்னதாக தம்மையும் மேலும் சிலரையும் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு ரணில் பணிப்புரை விடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சீனக் காலணியாக மாற்றியமைக்க தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்ப்பதனால் இவ்வாறு தாம் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,