எய்ட்ஸ் நோய்க்கு புதிய மருந்தை கண்டுபிடித்து சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை!

எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துசென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ்உலகையே அச்சுறுத்தி வருகிறது.உலகின் பல்வேறு பகுதிகளிலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னைஐஐடிஉயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதிதலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எம்.முகமது ஹாசன், சின்மய்பிந்தி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இந்தக் குழுவினரின் ஆய்வுக்கட்டுரை அமெரிக்கன் கெமிக்கல்சொசைட்டி ஆய்விதழில் அண்மையில் வெளியானது. மருந்துகளை செயல்படாமல் செய்யும் எய்ட்ஸ் நோய்க்கு அதன் பலவீனமான பகுதியைக் கண்டறிந்து மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்து அழிக்கக் கூடிய மருந்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பயன் தரத்தக்க பல புதிய மருந்துகளை உருவாக்கக் கூடிய தரவுகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!