கறுப்பின மக்களுக்கு டிப்ஸ் தர முடியாது: – கருப்பின பெண்ணை இழிவு படுத்திய ஜோடிகள்

அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கும் கறுப்பின பெண் ஒருவரை, இழிவுபடுத்திய ஜோடிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Virginia மாகாணத்தில் Ashburn பகுதியில் New Mexico restaurant என்ற உணவகம் உள்ளது. இங்கு Kelly Carter என்ற பெண் பணியாற்றி வருகிறார். அந்த உணவகத்திற்கு கடந்த சனிக்கிழமை வெள்ளையர் ஜோடிகள் சாப்பிடுவதற்கு சென்றுள்ளனர்.அவர்களுக்கு Kelly Carter பரிமாறியதாக கூறப்படுகிறது. சாப்பிட்டு முடித்த அவர்கள், உணவகம் கொடுக்கும் சாப்பிட்டிற்கான ரசீதில் தங்களுடைய உபசரிப்பு நன்றாக இருந்தது, ஆனால் கறுப்பின மக்களுக்கு டிப்ஸ் தர முடியாது என்று எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.

இதைக் கண்ட அந்த பணியாளர் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அவர்கள் சாப்பிட்டுவிட்டு சென்ற பிறகு உணவகத்தின் ரசீதை பார்த்த போது சற்று குழப்பமடைந்தேன். இதனால் அதை தான் மூன்று முறை பார்த்ததாகவும், அதன் பின் அவர்கள் இவ்வாறு எழுதியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.இது ஒரு இனவெறி என்றும் இதை அனுமதிக்கவே முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதை மக்கள் முன்னேற்ற தேசிய கூட்டமைப்பான லாடன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது போன்ற வெறுப்பை பொறுத்துக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

Tags: