அரசாங்கத்தின் பயணத்தை நிறுத்திவிட முடியாது – ஜனாதிபதி

அரசாங்கத்தின் பயணத்தை நிறுத்தவிட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அது அரசாங்கத்தின் பயணத்தை பாதிக்காது என சுட்டிக்காட்டிள்ள அவர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் போது பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இவ்வாறு இடையூறுகள் விளைவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த சவால்களை எதிர்நோக்கி நாட்டுக்கு தேவையான அபிவிருத்தியை அரசாங்கம் மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,