ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது:

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் நடைபெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறிப்பாக இந்த வழக்கு குறித்த தீர்ப்பு தற்போதே எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்குவது சாத்தியமில்லை என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

Tags: ,