மாவையைச் சந்தித்த இந்திய துணைத் தூதுவர்!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அர்த்தமுள்ள அதிகார பகிர்வு குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய துணைத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது ‘ வடக்கு , கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு விஷேடமாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அர்த்தமுள்ள அதிகார பகிர்வு குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதி உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். ‘ என்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!