ஜல்லிக்கட்டு விவகாரம்: – மீண்டும் ட்விட்டரில் தரக்குறைவாகப் கருத்து கூறிய சுப்பிரமணியன் சுவாமி

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறியிருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் சுவாமியின் கருத்துக்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து கூறியவர்களை, மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து, சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: ,