2500 குழந்தைகளை சவப்பெட்டியில் அடைத்த பெண்: அதிர்ச்சி சம்பவம்

போலந்து நாட்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் பொழுது யூதர்களுக்கும், நாசிகளுக்கும் பெரும் பகை ஏற்பட்டிருந்தது.

அபோது, பல யூதர்களையும், யூதக் குடும்பங்களையும் நாசியினர் கெட்டோ எனும் சிறிய பகுதியில் சிறை பிடித்து வைத்துள்ளனர்.

அந்த சிரை பகுதியானது, சிறியது என்பதால் அதிகளவு மக்கள் அடைத்து வைக்க அங்கு, நோய் தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில், போலாந்தில் பிப்ரவரி 15, 1910-ல் பிறந்தவர் இரினா சென்ட்லர் என்பவர் சமூக சேவையில் மிகுந்த ஆர்வமுடையவர்.

இவர் மருத்துவத் துறையில் நர்ஸாக பணியாற்ரி வந்தார்.

மேலும், சமூக நல்வாழ்வு அமைப்பு மூலம் உணவு, உடைகள் அளித்து உதவி வந்தார்…

அப்போது, யூதர்களுக்கு உதவி செய்ய நினைத்த இரினா ங்கு தான் உயிரை பணயம் வைத்து தான் உதவி செய்ய வேண்டியுள்ளது என்பதை உணர்ந்து தனது உடன் உதவி செய்ய வந்தவர்களுடன் சேர்ந்து கெட்டோவில் இருந்து யூத குழந்தைகளை வெளியேற்ற ரகசியமாக உதவி செய்து வந்துள்ளார்.

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை கெட்டோவில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருந்தது.

இருப்பினும், நாசியின் கண்காணிப்பு கெட்டோ பகுதியில் கடுமையாகவும், விரிவாகவும் இருந்த காரணத்தினால் வேறு ஏதாவது வழியில் உதவி செய்யலாம் என நினைத்த இரினாவிற்கு ஒரு யுக்தி தோன்றியது.

அதாவது, குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி போன்றவற்றில் அடைத்து மீட்க முயன்றார்.

இவ்வாறு, குப்பை பைகள், சூட்கேஸ், சவப்பெட்டி மூலம் சுமார் 2500 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் இரினா.

இந்நிலையில், இரினா குழந்தைகளை காப்பாற்றிய விசயம் நாசி படையினர்ருக்கு தெரிய வரவே அவரை கைது செய்து சித்திரைவதை செய்து, கைகளை உடைத்து கொடுமைகள் செய்தனர்.

ஆனாலும், அந்த குழந்தைகள் பற்றி ஒரு தகவலும் கொடுக்காமல் அவர்களை காப்பாற்றினார் இரினா.

இதைத் தொடர்ந்து, நாசி படையில் ஒரு வீரருக்கு லஞ்சம் கொடுத்து இரினாவை சிறையில் இருந்த தப்பிய இரினா அன்றிலிருந்து கடைசி வரை இரினா போலியான அடையாளத்தில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், போரும் முடிவுக்கு வந்தது. குழந்தகளின் தகவல்களையும் அரசுக்கு கொடுத்து விட்ட பின் திருமணம் செய்துக் கொண்டு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார் இரினா.

இதையடுத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இரினா தனது 98வது வயதில் மரணம் அடைந்தார்.

மேலும், 1997-ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த வருடத்திற்கான நோபர் பரிசு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது.

Tags: ,