புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும் – பொதுநலவாய நாடுகள் அமைப்பு

இலங்கையில் புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் பற்றீசியா ஸ்கொட்லாண்ட் (Patricia Scotland) ஐ சந்தித்திருந்தார்.

பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயார் என பற்றீசியா ஸ்கொட்லாண்ட் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் தங்களது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,