என்னை காலில் விழ சொன்னவர்கள் மேல் தான் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்: – ஓ.பி.எஸ் அதிரடி

தமிழகத்தின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொது செயலாளர் சசிகலா காலில் விழுந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், ஓ.பி.எஸ்க்கு நெருக்கமான அமைச்சர்கள் இதுகுறித்து அவரிடம் கேட்டதாக தெரிகிறது.அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் பதவி என்பது என்னுடைய விசுவாசத்துக்குப் பரிசாக, மறைந்த ஜெயலலிதா அளித்தது.அதன் காரணமாகவே தற்போது மூன்றாவது முறையாக நான் முதல்வராக இருக்கிறேன்.

நான் இப்போது தன்னிச்சையாக செயல்படுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. என்னை, பல வழிகளிலும் செயல்படவிடக்கூடாது என முயற்சிக்கின்றனர்.முதல்வராக இருக்கும் நானே, அவர்கள் காலின் கீழே என காட்ட தான் என்னை அவர்கள் காலில் விழ சொன்னார்கள்.இதனால் என் கெளரவம் குறைந்து விடாது, என்னை காலில் விழ சொன்னவர்கள் மேல் தாம் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்.என் மேல் மக்களுக்கு பரிதாபம் தான் ஏற்படும் என தன்னுடைய நியாயத்தை விளக்கினாராம் ஓபிஎஸ்.

Tags: