இணைய சேவையை வழங்க கூகுள் தயாரித்த ட்ரோன் திட்டத்திற்கு மூடுவிழா!

இணைய ஜாம்பவானாகத் திகழும் கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது.

இவற்றின் வரிசையில் ட்ரோன் வகை விமானங்களின் உதவியுடன் இணைய வலையமைப்பு சேவையினை வழங்க திட்டிட்டிருந்தது.

இதற்கான பணிகள் 2014ம் ஆண்டின் பிற்பதியில் இருந்து Titan Aerospace எனும் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.

இதேவேளை 2015ம் ஆண்டில் Titan Aerospace நிறுவனமானது தனது தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்திலிருந்து பிரிந்தது.

இதன் காரணமாகவும், கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றுபவர்கள் ஏனைய பகுதிகளில் பணிபுரிய வேண்டியிருப்பதன் காரணமாகவும் குறித்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனினும் பலூன்கள் மூலமாக பின்தங்கிய மற்றும் தொலைதூர இடங்களுக்கு இணைய சேவையினை வழங்கும் Project Loon திட்டத்தில் கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது.

Tags: , ,