ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு உட்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள், சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி காரியாளத்தில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பென்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் ஜனாதி பதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வறுமையில் இருந்து உயர்த்தும் நோக்கில் குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்க்பட்டது.

தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு, மருத்துவமனைகள் பாடசாலைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களில் பணியாளர்களாக செயற்படுவதற்கான பயிற்ச்சிகள் வழங்கப்படுவதுடன், அதற்கான நியமனங்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!