டேட்டிங்கிற்கு முன் இதையெல்லாம் செய்யாதீங்க

நீங்க உங்களுடைய பார்ட்னரை சும்மா ஒரு சந்திப்புக்காக போறீங்களா இல்லை காரசாரமான காரியத்துல எறங்கப் போறீங்களோ. அதற்கு முன்னால நீங்க சில முன்னெச்சரிக்கைகளை செய்யவேண்டியிருக்கும். ஆமாங்க, ரொம்பவும் யோசிக்காம அல்லது ரொம்பவும் பிளான் பண்ணாம நீங்க ரிலாக்ஸா இருக்கவேண்டியது முக்கியம். ஆனால் நீங்க செய்யக்கூடாத செயல்கள் சில இருக்கு. அது என்னனு பார்க்கலாம் வாங்க.

டேட்டிங்கின் முந்தைய நாள் :

நீங்க டேட்டிங் போறதுக்கு முந்தைய நாள் கண்ணுமண்ணு தெரியாம குடிச்சா மறுநாள் நீங்கள் வருத்தப் பட வேண்டிவரும். முதல்ல மது உங்கள் உணர்வுகளை மந்தமாக்கி உங்கள் உங்கள் செயல்பாட்டுத் திறனை குறைத்துவிட வாய்ப்புண்டு. முதலில் வேகமாகத்தான் தொடங்கும் ஆனால் பின்னர் குறைந்துவிடும்

அந்த இடத்தில் ஷேவ் செய்வது

உங்கள் சருமம் ஷேவ் செய்யும்போது உணர்வு மிகுதிக்கு உள்ளாகிறது. அதேபோல் ஷேவ் செய்யும்போது சிறு காயங்கள் ஏற்பட்டால் அது உணர்வு அனுபவித்தலை பாதிக்கும்.

வாயுத் தொல்லை மற்றும் வாய் துர்நாற்றம் உண்டாக்கும் உணவுகள்

சில உணவுகள் வாயுத் தொல்லையை அல்லது வாய்துர் நாற்றத்தை உண்டாக்கும். இது உங்களுக்கு அசௌகரியத்தை தரும். ரொம்னான்ஸுக்கு இடையூறாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற உணவுகளை உண்பது நீங்கள் திட்டமிட்டு செயல்படுத்தும் உங்கள் பார்ட்னருடனான அந்தரங்கத் தருணங்களை பாதிக்கக் கூடும்

வயிறு முட்ட சாப்பிடுவது :

உங்கள் இதயம் கவர்ந்தவருடனான தனிப்பட்ட தருணங்களை முன் வயிறு புடைக்க உண்ணுவது உங்களை தூங்குமூஞ்சியாக்கி, சோம்பேறியாகவும் அசட்டையாகவும் ஆக்கும். உங்கள் செயல்பாடுகள் மெதுவாகி உங்களுக்கு உந்துதல் இல்லாமல் போக வாய்ப்புண்டு.

சண்டை

டேட்டிங் செல்லும் முந்தைய நாள் உங்களை சற்று அமைதியாக வைத்துக் கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்களை கொள்வது அல்லது மற்றவருடன் சண்டையிடுவது உங்கள் காதல் உணர்வுகளையும் எண்ணங்களையும் பாதிக்கும். எனவே மகிழ்வாகவும் குதூகலத்துடனும் இருக்க முயற்சித்தால் உங்கள் டேட்டிங் விரும்பத்தக்க முறையில் அமையும்

வாய்துர் நாற்றம்

வாய்துர் நாற்றம் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் இது நீங்கள் உங்கள் துணையை முத்தமிடும்போது ஏற்படும் உணர்வினை பாதிக்கலாம். வாய் சுத்தம் நல்லது தான் ஆனால் அதற்கு வேறு வழிகளைத் தேடலாம். எதற்கும் செல்லுமுன் மவுத் வாஷை உபயோகிப்பது நல்லது.

Tags: