கொரோனாவினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்..!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை தயாரிப்பது குறித்து, இன்று (27) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

உரிய நிபுணர் குழுவுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இது தொடர்பான வழிகாட்டல்களை, அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் வர்த்தமானி, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதன்படி, சடலங்களை அடக்கம் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய முறைமைகளை தயாரிக்க வேண்டும் என குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, இது தொடர்பான கலந்துரையாடலொன்று, விசேட நிபுணர்களுடன் இன்று இடம்பெறவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!