அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இதற்கமைய, குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே, அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகள் உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து ஆராயுமாறு கோரி சட்டத்தரணிகள் நால்வர் எழுத்துபூர்வமாக முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!