பெண்கள் விடுதிக்குள் புகுந்து போலீசார் செய்த மோசமான செயல்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரணை என்ற பெயரில் மிரட்டி பெண்கள் விடுதிக்குள் புகுந்த பொலிசார் மிரட்டி ஆடையின்றி நடனமாட வைத்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள கனேஷ் நகர் பகுதியில் மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

ஆதரவற்ற மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகளுக்கு இந்த விடுதியில் தங்கும் வசதியும், இலவச உணவும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த விடுதியில் அத்துமீறி நுழையும் பொலிசார் மற்றும் விடுதி ஊழியர்கள் சிலர் அங்கு தங்கியிருக்கும் பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அத்துமீறி நடந்து கொண்டதுடன் அவர்களில் சிலரை மிரட்டி ஆடைகளை களைய செய்து நடனமாடச் செய்துள்ளனர்.

இதனை வீடியோவாகவும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சில ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி, மகாராஷ்டிர சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

2 நாட்களில் இக்குழு விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!