உடற்கல்வி ஆசிரியருக்கு மல்லாகத்தில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம்- மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பேசிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்டகுழு ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!