சசிகலாவின் அறிவிப்பால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் அ.தி.மு.க!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில், அவரது தோழி சசிகலா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றார். முதல்-அமைச்சர் பதவியையும் அவர் ஏற்க இருந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டார்.

4 ஆண்டு சிறை தண்டனையை முடித்துக் கொண்டு, பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ‘‘தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன். ஜெயலலிதாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.’’ என்று அதிரடியாக தெரிவித்தார்.

அதிர்ச்சி

சசிகலாவின் இந்த அறிவிப்பால், தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டது. சசிகலா, தியாகராயநகர் இல்லத்தில் வந்து தங்கினார். அவரது எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய புள்ளிகள் தன்னை வந்து சந்திப்பார்கள் என்று நினைத்திருந்ததாகவும், ஆனால், அப்படி எதுவும் நடைபெறாததால், சசிகலா அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில், சசிகலாவின் நெருங்கிய உறவினர்களும், அவரிடம் அ.ம.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருந்த டி.டி.வி.தினகரனின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், சசிகலா – டி.டி.வி.தினகரன் இடையே சரியான முறையில் பேச்சு வார்த்தை இல்லாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

3-வது அணி

இதற்கிடையே, கடந்த 24-ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளும் வந்ததால், அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய சசிகலா, தொண்டர்களை விரைவில் சந்திக்கப் போவதாக மீண்டும் அறிவித்தார்.

ஆனால், இடையில் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வை இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியானது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க., இதை நேரடியாக கேட்டுக் கொண்டதாகவும், மறுத்தால் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், அதில் இருந்து அ.ம.மு.க.வுக்கு தொகுதிகள் வழங்க இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

மகிழ்ச்சி – அதிர்ச்சி

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் திடீரென, ஜெயலலிதா ஆட்சி தொடர பிரார்த்தனை செய்வதாகவும், அரசியலில் இருந்து விலகப் போவதாகவும் சசிகலா அதிரடியாக அறிவித்துவிட்டார். அவரது இந்த அறிவிப்பு அ.தி.மு.க.வினரிடையே மகிழ்ச்சியையும், அ.ம.மு.க.வினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவின் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்? என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதுகுறித்து விசாரித்தபோது, பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும், அ.தி.மு.க.வை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்திருக்கிறார். அது நடக்கவில்லை என்பதால், 3-வது அணியோடு கைகோர்த்து, தேர்தலை சந்திக்கலாம் என்றும் முடிவு செய்திருக்கிறார். ஆனால், இந்த முடிவு அ.தி.மு.க. தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டால், மீண்டும் அ.தி.மு.க.வில் கோலோச்ச முடியாது என்றும், அ.தி.மு.க. தோல்விக்கான பழி தன் மீது விழுந்து விடும் எனவும் நினைத்திருக்கிறார். எனவேதான், ‘‘பொறுத்து இருந்து பார்ப்போம்’’ என்ற முடிவுடன் அவர் அரசியல் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகின.

ஜெயலலிதா ஓய்வு அறிவிப்பு

ஏற்கனவே, 1989-ம் ஆண்டு மார்ச் 18-ந்தேதி, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ஜெயலலிதா பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். மேலும், எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார்.

ஆனால், அடுத்த நாளே அவர் அதை மறுத்தார். தான் அப்படி ஒரு அறிக்கையையும், சபாநாயகருக்கு ஒரு கடிதத்தையும் தயாரித்து வைத்திருந்ததாகவும், அதை குடும்ப நண்பர் நடராஜனிடம் (சசிகலாவின் கணவர்) கொடுத்து வைத்திருந்ததாகவும், போலீசார் அவர் வீட்டில் நடத்திய சோதனையின்போது, அறிக்கை மற்றும் கடிதத்தை கைப்பற்றி, அதை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும், தான் எதையும் வெளியிடவில்லை என்றும் கூறியிருந்தார்.

அ.தி.மு.க.வுக்கு பலம்

அப்போது, ஜெயலலிதா எடுத்த முடிவைப்போலத்தான், அதே மார்ச் மாதத்தில் சசிகலாவும் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவின் அரசியல் விலகல் அறிவிப்பும் தற்காலிகமானதுதான் என்று சொல்லப்படுகிறது.

சசிகலா நேற்று முன்தினம் வெளியிட்ட தனது அறிக்கையில், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். அது, அ.தி.மு.க.வினரை சொல்கிறாரா?, அ.ம.மு.க.வினரை சொல்கிறாரா?, அல்லது 2 கட்சியினரையும் சேர்த்து சொன்னாரா? என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

இருந்தாலும், சசிகலாவின் தற்போதைய முடிவு, அ.தி.மு.க.வுக்கு பலம் என்றே

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!