கடந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 350 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவானவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 94 பேர் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் 31 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 14 பேரும் கேகாலை மாவட்டத்தில் 13 பேரும் மன்னார் மாவட்டத்தில் 12 காலி மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் 11 பேரும் ஏனையவர்கள் நாட்டின் 17 மாவட்டங்களில் இருந்து தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியுள்ள 12 பேருக்கு நேற்றைய நாளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களுள் 81 ஆயிரத்து 381 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 982 பேர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 609 பேர் வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

இதேவேளை நேற்றைய நாளில் 4 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!