ஓட்டமாவடியில் நேற்று 9 ஜனாஸாக்கள் அடக்கம்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த மேலும் 7 பேரின் சடலங்கள் நேற்று ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றினால் மரணமாவோரின் சடலங்களை நல்லடக்கம் செய்ய முடியும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் முதலாவது சடலம் நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடி மஜ்பா புரத்திற்கு நேற்று மாலை எடுத்துச் செல்லப்பட்டது.

மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணின் ஜனாசா கொவிட் தொற்றினால் மரணமடைந்து ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஜனாசாத் தொழுகை நடத்தப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து இதுவரை, 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!