இலங்கையின் அறிக்கை தவறானது! – இந்தியா தெரிவிப்பு.

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் குறித்த இலங்கையின் முன்மொழிவுக்கு இந்திய தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற இலங்கை அரசாங்கத்தின் கூற்று ‘உண்மையில் தவறானது’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை உருவாக்கி இயக்க அதானி குழுவுடன் ஒரு கூட்டு முயற்சியை கடந்த செவ்வாயன்று கொழும்பில் ஒப்புதல்அளித்தது.

அத்துடன் இந்த திட்டத்திற்கு முதலீட்டாளர்களை பரிந்துரைக்க அமைச்சரவை நியமித்த பேச்சு வார்த்தைக் குழு தூதரகம் மற்றும் ஜப்பானிய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் “அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட்”முன்வைத்த இந்த திட்டத்திற்கு தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது” என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இது குறித்து நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இலங்கை அரசாங்கம் இந்த திட்டத்தில் நேரடி முதலீட்டை மேற்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொழும்பில் இந்திய தூதரகம் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதாக வெளியான அறிக்கை உண்மையில் தவறானது என்று ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!