உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அரசாங்கம் பல்வேறு ஆவணங்களை மறைக்கின்றதா?- வகமுல்லே உதித தேரர் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில், அரசாங்கம் பல்வேறு ஆவணங்களை மறைக்கின்றதா என தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித தேரர் கேள்வி எழுப்புகின்றார்.

அம்பலான்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு கோப்புகளை மறைத்து அல்லது காணாமல்ஆக்கி அவற்றை வெளிச்சத்திற் கொண்டுவராது வைத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரு சந்தேகம் எழுகின்றது. தேசிய பாதுகாப்பு இல்லை என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு, ஆட்சிக்கு வருவதற்காக உயிர்தத ஞாயிறு தாக்குதலை பிரதான காரணமாக அமைத்துக் கொண்டார்கள்.

இதிலும் ஆவணங்களை மறைத்து, உரிய நபர்களைப் பாதுகாப்பது யார்? அவ்வாறு எனில் அராங்கம் இதற்கு ஓரளவு ஒத்துழைப்பு வழங்குகின்றது. அரசாங்கம் தமக்கு நெருக்கமானவர்களை இதிலிருந்து பாதுகாப்பதாகவே மக்கள் நினைப்பார்கள். அரசாங்கம் மாயாஜாலமொன்றை காட்டி மக்களை ஏமாற்றுகின்றது.இது கொலைக்கு நிகரான குற்றமாகும்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கு, தண்டனையைப் பெற்றுக் கொடுக்க,
உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!