பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாட்டில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் திட்டமிட்டபடி எதிர்வரும் 15 ஆம் திகதி அனைத்து வகுப்புகளுக்குமான பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாடசாலைகளை மீள திறப்பதற்கான தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும், மேல் மாகாண பாடசாலைகளை மீள திறக்க கல்வி அமைச்சு தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான இறுதி தீர்மானத்தை சுகாதார தரப்பிரரே மேற்கொள்ள வேண்டும் எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டு நாட்களுக்குள் அவரது தீர்மானம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில், எதிர்வரும் 15 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!