தென் ஆப்பிரிக்க வகை கொரோனா டெல்லியில் கண்டுபிடிப்பு!

கொரோனா இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருமாறிய கொரோனாவாக புதுவடிவம் பெற்று தாக்கத் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் புதுவகையான கொரோனா பாதிப்பு அறியப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுடெல்லியில் முதன்முறையாக ஒரு நபருக்கு தென்னாப்பிரிக்க வகை கொரோனா தாக்கியிருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

33 வயதான அந்த இளைஞர், ஒரு வாரத்திற்கு முன்பாக லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த நிலையில் அவருக்கு தென் ஆப்பிரிக்க வகை கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் இந்த வகை கொரோனா பாதிப்பு அறியப்பட்ட முதல் நபர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே மருத்துவமனையில் 3 பேருக்கு இங்கிலாந்தில் பரவிய உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டு உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்தியாவில் முதல்முறையாக 4 பேருக்கு தென் ஆப்பிரிக்க வகை கொரோனாவும், ஒருவருக்கு பிரேசில் வகை கொரோனாவும் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது நினைவூட்டத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!