உரிய நேரத்தில் அரசியலுக்கு வருவாராம் சந்திரிகாவின் மகன்!

தனது மகன் உரிய நேரத்தில் அரசியலுக்குப் பிரவேசிப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற புதுச்சிந்தனைக்குள் பிரவேசிக்கின்ற சந்தர்ப்பத்திலேயே அது நிகழும் என்றும் இணைய ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தான் குடும்ப அரசியலை வெறுப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!