தென்னாபிரிக்காவில் மாணவனை கயிறு கட்டி மலக்குழிக்குள் இறக்கிய கொடூர ஆசிரியர்!

தென்னாபிரிக்காவில் பாடசாலை மலக்குழிக்குள் விழுந்த ஆசிரியரின் மொபைலை மீட்க, மாணவன் ஒருவனை கயிறு கட்டி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள அந்த பாடசாலையின் குறித்த ஆசிரியர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதால், குறித்த ஆசிரியர் தனது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, அவருக்கு ஆசிரியராகும் பணியாற்றும் தகுதி இல்லை எனவும், அதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Lubeko Mgandela என்ற அந்த ஆசிரியர் தவறுதலாக, பாடசாலை மலக்குழிக்குள் தமது மொபைலை தவறவிட்டுள்ளார்.

அதனை மீட்க வேண்டும் என முடிவெடுத்த ஆசிரியர் Lubeko Mgandela, 11 வயதான மாணவனை கயிறு கட்டி மலக்குழிக்குள் இறக்கியுள்ளார்.

ஆனால் மலக்குழிக்குள் இறங்கி தேடிய மாணவனால் மொபைலை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் முழுவதும் மலத்தில் குளித்த நிலையில் சிறுவனின் கோலம் பார்ப்போரை கலங்கடித்துள்ளது.

மட்டுமின்றி, சக மாணவர்கள் கிண்டலடிக்க, மாணவன் அதன் பின்னர் பாடசாலைக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

மலக்குழியில் இருந்து மொபைலை மீட்டால் 13 டொலர் தருவதாக கூறியிருந்த ஆசிரியர், பின்னர் 3 டொலர் மட்டுமே மாணவனுக்கு கூலியாக அளித்துள்ளார்.

இந்த விவகாரம் அப்பகுதி முழுவதும் பேசுபொருளான நிலையில், கல்வித்துறை நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!