அமெரிக்காவில் சிறுமியை கொடூரமாக கொன்ற 14 வயது சிறுவன்!

அமெரிக்காவில் சிறுமி ஒருத்தி காணாமல் போன இரண்டே மணி நேரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவளது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் இண்டியானாவில் Grace Ross என்ற ஆறு வயது சிறுமி ஒருத்தி கடந்த வெள்ளியன்று திடீரென மாயமானாள். பொலிசார் அவளை தேடும் முயற்சியில் இறங்க, இரண்டே மணி நேரத்தில், அவளது உயிரற்ற உடல் மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சியளிக்கும் விதமாக, Grace உயிரிழந்த வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

அவன் சிறுவன் என்பதால், அவனது பெயர், புகைப்படம் முதலான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சிறுமியின் பிரேதப்பரிசோதனையின் முதல் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதில், Grace கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால், இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான Derek Dieter கூறும்போது, என்ன நடந்தது என்பது குறித்து மிகக் கொடூரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுவே குற்றவாளி ஒரு சிறுவனாக இல்லாமல் வயது வந்த நபராக இருந்திருந்தால், சட்டம் அவனை அணுகிய முறையே பயங்கரமாக இருந்திருக்கும் என்கிறார்.

Graceஐக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின் காவலில் அடைக்கப்பட்டுள்ளான்.

என்ன நடந்தது, ஏன் அவன் அந்த சிறுமியை கொலை செய்தான் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!