இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு Sinopharm தடுப்பூசி வழங்க நடவடிக்கை: சுதர்ஷனி தெரிவிப்பு!

இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளேதெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீன தூதரம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை இலங்கையில் வசிக்கும் சீனர்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் sinopharm கொவிட் 19 தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!