இத்தாலியில் பாடசாலைகள் மூடப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!

இத்தாலியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 76 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 04 ஆயிரத்து 942 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,99,762 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலியில் சுமார் 5,71,672 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக அந்நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்து மூடப்பட்டுள்ளன. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோது, ​​மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அங்கு பள்ளிகள் மூடப்பட்டதை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா நோய்த்தொற்றுகளைத் தடுக்க முயற்சிப்பதற்காக பள்ளிகளை தேவையற்ற முறையில் மூடுவதாக போராட்டம் நடதியவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இத்தாலிய பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!