மேல்மாகாண பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு விடுத்த அதிரடி தகவல்!

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில், அனைத்து வகுப்புகளையும் வழமைப்போல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் அனைத்து வகுப்புகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மிள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று காலை அனுமதி வழங்கபட்டிருந்தது..

இது தொடர்பான வழிகாட்டுதல்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம், சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் பெற்றுக்கொடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், தனியார் வகுப்புகளை ஆரம்பிப்து குறித்து இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது குறித்து தற்போதைய நிலையில் ஆராயப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஜ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!